Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • இந்தியா
  • பாஜகவை காலி செய்யும் ராமர் கோயில் சர்ச்சை? யோகி ஆட்சிக்கு வரும் பெரிய ஆபத்து? வெளியான தகவல்
இந்தியா

பாஜகவை காலி செய்யும் ராமர் கோயில் சர்ச்சை? யோகி ஆட்சிக்கு வரும் பெரிய ஆபத்து? வெளியான தகவல்

Email : 0

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில் நடந்த முறைகேடு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. ஆரம்பத்தில் இது வழக்கமான அரசியல் குற்றச்சாட்டாக தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் இது பூதாகரமாக வெடித்து வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் விவகாரம் மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது. அங்கு பல கோடி பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த பணத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறிய சலசலப்பாகத் தொடங்கியது. அகலேஷ் யாதவ் இதை எழுப்ப, ராமர் கோயில் அறக்கட்டளை பதில் கொடுத்தது. மாநில பாஜக அரசும் இதில் முறைகேடு இல்லை என சொன்னது.

பகீர் தகவல்கள் ஆனால், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியவுடன் நிலைமை மொத்தமாக மாறியது. விசாரணையில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைக்கிறது. கோடி கணக்கான பக்தர்களின் நம்பிக்கையோடு தொடர்புடைய இந்த விவகாரம் இப்போது யோகி அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இது வரவிருக்கும் உபி தேர்தல் களத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts