Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • இந்தியா
  • இந்தியர் இல்லை.. 15 ஆவணங்கள் கொடுத்தும் தேசிய குடிமக்கள் பதிவேட்டால் குடியுரிமையை இழந்த தொழிலாளி
இந்தியா

இந்தியர் இல்லை.. 15 ஆவணங்கள் கொடுத்தும் தேசிய குடிமக்கள் பதிவேட்டால் குடியுரிமையை இழந்த தொழிலாளி

Email : 1

கவுஹாத்தி: அசாமில் வசித்து வரும் தினக்கூலி தொழிலாளி ஒருவர் தான் ஒரு இந்தியர் என்பதை நிரூபிக்க 1951ம் ஆண்டு நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டு விவரம், வாக்காளர் அடையாள அட்டை உள்பட 15 வகையான ஆவணங்களை சமர்ப்பித்தும் இந்தியர் என்பதை நிரூபிக்க தவறிவிட்டார். அவர் வெளிநாட்டவர் என்று வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் கவுஹாத்தி உயர்நீதிமன்றமும் அதனை உறுதி செய்துள்ளது.

அசாமில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஹிமாந்த விஸ்வா சர்மா உள்ளார். அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை கண்டுபிடித்து வெளியேற்றும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens or NRC) அமலில் உள்ளது.

கடந்த 1951ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதன்பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் உருவாக்கியது. 2019ல் திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அசாமில் வசிப்போர் தங்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த 1951ம் ஆண்டு நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் தங்களின் தந்தை அல்லது தாத்தா – பாட்டியுடனான தொடர்பை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் 1971ம் ஆண்டுக்கு முன்பு மூதாதையர்களின் லெகஸி டேட்டா (Legacy Data) ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அசாமில் வசிக்கும் கூலி தொழிலாளி ஒருவர் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். 15 வகையான ஆவணங்களை அவர் சமர்ப்பித்தும் இந்திய குடியுரிமை கொண்டவர் என்பது நிரூபிக்க முடியவில்லை. இதனை வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம் மற்றும் அசாம் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts