Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • விளையாட்டு
  • வெறும் Celebration இல்லை…நார்வே வீரர்களின் ‘Viking Row’ பின்னால் உலகையே வியக்க வைக்கும் 1,000 ஆண்டு வைக்கிங் வரலாறு!
விளையாட்டு

வெறும் Celebration இல்லை…நார்வே வீரர்களின் ‘Viking Row’ பின்னால் உலகையே வியக்க வைக்கும் 1,000 ஆண்டு வைக்கிங் வரலாறு!

Email : 9

கால்பந்து போட்டியில் கோல் அடித்த பிறகு நார்வே வீரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, துடுப்பை இழுப்பது போல செய்யும் அந்த கொண்டாட்டத்தை பலரும் கவனித்திருப்பார்கள்.இது சாதாரண Celebration அல்ல. இதன் பெயர் “Viking Row”.

யார் இந்த வைக்கிங்குகள் (Vikings)?

இன்றைய நார்வே, ஸ்வீடன், டென்மார்க் பகுதிகளில் சுமார் 8-ஆம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கடல் போர்வீரர்களே வைக்கிங்குகள் (Vikings). மரத்தால் செய்யப்பட்ட நீளமான கப்பல்களில் (Longships) நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் கடலைக் கடந்து ஐரோப்பாவின் பல பகுதிகளுக்குச் சென்று வர்த்தகம் செய்ததோடு, போர்களிலும் ஈடுபட்டனர்.


இந்த Viking Row கொண்டாட்டத்தின் அர்த்தம் என்ன?

வைக்கிங்குகள் தங்கள் Longship கப்பல்களை நகர்த்த அனைவரும் ஒரே தாளத்தில் துடுப்பை (Oar) இழுப்பார்கள். அதையே நினைவுபடுத்தும் வகையில், நார்வே வீரர்கள் போட்டியில் ஜெயித்த பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து துடுப்பை இழுப்பது போல கொண்டாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் கூறும் செய்தி: ஒரே அணியாக போராடினோம், அனைவரின் முயற்சியால்தான் வெற்றி கிடைத்தது ,நமது வைக்கிங் மரபை பெருமையுடன் நினைவுகூர்கிறோம் என்பதே ஆகும்

ஏன் தற்போது அதிகம் பேசப்படுகிறது?

2026 உலகக்கோப்பையில் நார்வே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் வீரர்கள் இந்த Viking Row Celebration-ஐ செய்வதால், சமூக வலைதளங்களிலும் இது வைரலாகி வருகிறது.

இது வெறும் Goal Celebration அல்ல…

ஒரு நாட்டின் 1,000 ஆண்டு பழமையான கடல் போர்வீரர்களின் வரலாற்றையும், ஒற்றுமையையும், பெருமையையும் உலக மேடையில் மீண்டும் நினைவூட்டும் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts