Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • தமிழகம்
  • அடுத்த 3 மணி நேரம்.. சென்னையில் வெளுக்க போகுது மழை.. தமிழகம் முழுக்க 14 மாவட்டங்களுக்கு அலர்ட்
தமிழகம்

அடுத்த 3 மணி நேரம்.. சென்னையில் வெளுக்க போகுது மழை.. தமிழகம் முழுக்க 14 மாவட்டங்களுக்கு அலர்ட்

Email : 1

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கும், கோவை, தென்காசி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நேற்றும், இன்றும் மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்தே இந்த மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அடுத்த 3 மணி நேரம் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவையிலும் தொடர்ச்சியாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

“தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணி வரை கோவை, தென்காசி, நீலகிரி, குமரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதே போன்று இன்று இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts